News February 2, 2025

கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேருக்கு சிறை தண்டனை

image

சென்னை, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது தாய் பொன்னம்மாள் இருவரையும், அத்தை மல்லிகா உள்ளிட்ட 5 பேர் கடந்த 2014இல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் (32), மல்லிகா (56), சந்திரசேகரன் (40), ஆகிய மூவருக்கும் 5 ஆண்டுகளும், முத்து (55), குமார் (48), ரமேஷ் (36) ஆகிய மூவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் விதிக்கப்பட்டது.

Similar News

News March 2, 2026

குன்றத்தூரில் பயங்கர தீ விபத்து!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கடை தீப் பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

News March 2, 2026

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கோபி(44). இவரது மகன் ஆதித்யா(17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ஆதித்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 2, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!