News August 25, 2024
கொரட்டூரில் ஜிபே மூலம் ரூ.87,000 பணம் பறிப்பு

சென்னை மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு ரயில் மூலம் கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த இருவர் அவரை வழிமறித்து ஜிபே மூலம் ரூ.87,000 பணம் மற்றும் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடூமை செய்த வழக்கில் வினோத் என்பவரை பட்டாபிராம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று 17.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
News September 18, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.18) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News September 17, 2025
தொழிற்பயிற்சி நிலையங்கள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்