News January 28, 2026
கொண்டாட்டத்திற்கு தயாராகும் தவெக

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மாவட்ட & மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த விழாவில் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 5, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
News February 5, 2026
ராசி பலன்கள் (05.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 5, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்த OPS ஆதரவாளர்கள்

OPS அணியை சேர்ந்த நிர்வாகிகள், அடுத்தடுத்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், இராமநாதபுரம் OPS அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேகம் ராஜ்கபூர், நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் EPS முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் மீண்டும் இணைத்து கொண்டனர்.


