News October 23, 2024
கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு

கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் நிலச்சரிவு இன்று ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சாலையில் பாறைகள், மண் கிடப்பதால் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
திண்டுக்கல்லில் அதிரடி கைது!

திண்டுக்கல், கோவில்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ராக்காச்சிபுரம் பகுதியில் டூவிலரில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சுமார் 1.120 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 1, 2026
வத்தலகுண்டு: இறந்த கணவர் உடலுடன் வாழ்ந்த மனைவி

திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியை சேர்ந்து வழக்கறிஞர் ஜெயபாண்டி வயது 72,. இவரது மனைவி மஞ்சுளா தேவி வயது 66. இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசப்படுவதாகவும், வீடு பூட்டி உள்ளதாகவும் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் வீட்டை திறந்து பார்த்த பொழுது, இறந்த கணவருடன் மஞ்சுளா தேவி இருந்துள்ளார். உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
News February 1, 2026
திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


