News May 2, 2024
கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. உள்ளூர் மக்களும், தீயணைப்பு துறையினரும் தீயை தொடர்ந்து அனைத்து வரும் நிலையில் இன்றும் ஏழாவது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதிகாலையில் பனிமூட்டம் போல் புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
Similar News
News April 6, 2026
ஒட்டன்சத்திரம்: மேலும் ஒருவரின் உடல் மீட்பு!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆடில்(19) தனது நண்பர்கள் சதாம் உசேன்(18), ஆயாஸ்(19), பயாஸ்(19) ஆகியோருடன் தலையூத்து அருவிக்கு சென்றனர். தடைசெய்யப்பட்ட மேல்தலையூத்து பகுதியில் குளித்தபோது ஆயாஸ், பயாஸ் தவறி நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்ற சென்ற ஆடில், சதாம் உசேனும் மூழ்கி 4 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3 நாட்கள் தேடுதலுக்கு பின், சதாம் உசேனின் உடலும் நேற்று மீட்கப்பட்டது.
News April 6, 2026
திண்டுக்கல்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

தென்னம்பட்டி எலப் பார்பட்டியை சேர்ந்தவர் மாயி (40). இவரது மனைவி தீபா (36). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாயி தீபாவை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த தீபா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவான மாயியை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.
News April 6, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.


