News October 23, 2024

கொடைக்கானலில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்

image

கொடைக்கானல் வந்த தமிழக ஆளுநர் R.N.ரவியின் கவனத்தை ஈர்க்கும் வ கையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.

Similar News

News January 3, 2026

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல்லில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். voters.eci.gov.in இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

News January 3, 2026

திண்டுக்கல் மூச்சு திணறி குழந்தை பலி!

image

திண்டுக்கல் அருகே எரியோடு இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (25).இவர் தனது மனைவி, 8 மாத ஆண் குழந்தையுடன் திண்டுக்கல் வேடபட்டியில் அவரது உறவினர் வீட்டில் குடியிருந்து வருகிறார்.கடந்த சிலநாட்களாக இவரது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!

News January 3, 2026

வத்தலகுண்டு வாலிபர்கள் அட்டகாசம்!

image

திண்டுக்கல்: சமூக வலைதளத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ வெளியிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் கௌதம் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டு பழைய வத்தலகுண்டு சேர்ந்த சென்றாய பெருமாள், விஜயகுமார்;துரை அரசு ஆகிய3பேரைகைது செய்து பட்டகத்தியை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!