News December 17, 2025
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் அரசு

பிஹாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் 1.40 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் தலா ₹10,000 செலுத்தப்பட்டது. அப்போது, தர்பங்கா கிராமத்தில் சில ஆண்களின் கணக்கிலும் தவறுதலாக ₹10,000 செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதை திரும்ப பெற கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் உள்ளூர் மக்கள். அந்த பணத்தை தீபாவளிக்கே செலவழித்துவிட்டதால் தங்களால் எப்படி தரமுடியும் என்றுள்ளனர்.
Similar News
News April 8, 2026
வரலாறு காணாத விலை குறைந்தது.. மகிழ்ச்சி செய்தி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே 2 வாரங்கள் <<19594820>>போர் <<>>நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால், கச்சா எண்ணெய் விலை 17% சரிந்து பீப்பாய் ஒன்று $95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
News April 8, 2026
வீரமணி பிரசாரத்திற்கு NO சொல்லும் திமுக வேட்பாளர்கள்

திமுக கூட்டணியை ஆதரித்து கி. வீரமணி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதை திமுக வேட்பாளர்கள் விரும்பவில்லையாம். ஆண்டு முழுக்க இந்து மத எதிர்ப்பு கருத்துகளை பேசிவருபவர் வீரமணி. அவரது பிரசாரத்தால் திமுகவுக்கு வரும் ஓட்டுகள் வராது என்பதே தங்களின் அச்சம் என தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அக்கட்சி வேட்பாளர்கள் குமுறி வருகிறார்களாம்.
News April 8, 2026
DC vs GT: ஷுப்மன் கில் ரிட்டர்ன்

DC – GT அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை ஆடிய 2 மேட்ச்சிலும் வென்ற DC அணி, வெற்றி கணக்கை துவக்காத GT உடன் மோதுவதால் போட்டி டஃப் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் டேவிட் மில்லர் முகத்தில் அடிபட்டிருந்தாலும், நலமுடன் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார். அதேநேரம், தசைப்பிடிப்பால் ஓய்விலிருந்த ஷுப்மன் கில், இப்போட்டியில் விளையாடவுள்ளதை சாய் சுதர்சன் உறுதி செய்துள்ளார்.


