News April 10, 2024
கொடுங்கோல் ஆட்சியை நோக்கி நகர்கிறோம்

கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்தியா நகர்வதாக வயநாடு தொகுதி சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதை ஏற்க மறுக்கிறது. இல்லை என்றால் ராகுல் இங்கு போட்டியிட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார். மேலும், தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளதால், அதனை அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என்றார். ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
Similar News
News November 6, 2025
WPL: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் லிஸ்ட்

மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் பிரீமியர் லீக் மீது திரும்பியுள்ளது. 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன்களாக உருவெடுத்துள்ளன. அடுத்த சீசனுக்கான ஏலம் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீராங்கனைகளின் பட்டியலை EPSN தளம் வெளியிட்டுள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.
News November 6, 2025
நவம்பர் 6: வரலாற்றில் இன்று

*1913–தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார். *1926–புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் பிறந்தநாள். *1937–அரசியல்வாதி யஷ்வந்த் சின்ஹா பிறந்தநாள். *1940–பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமி பிறந்தநாள். *1983–நடிகை நீலிமா ராணி பிறந்தநாள். *1983–நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாள். *1987–டென்னிஸ் வீராங்கனை ஆனா இவனோவிச் பிறந்தநாள்.
News November 6, 2025
‘Definitely Not’ ஐபிஎல் விளையாட தோனி ரெடி

2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனின் முடிவில் 2026 IPL-ல் விளையாடுவேனா என்று தெரியாது, அதுகுறித்து 4-5 மாதங்களில் முடிவெடுப்பதாக தோனி கூறியிருந்தார். இந்நிலையில் தோனி ஓய்வு பெறவில்லை என்றும், 2026 சீசனில் அவர் கட்டாயம் விளையாடுவார் எனவும் CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


