News December 7, 2024

கொடி தின வாழ்த்து தெரிவித்த முன்னாள் எம்.பி

image

கொடி நாள் அனைத்து பகுதிகளிலும் இன்று நினைவு கூறபடுகிறது. நாட்டின் விடுதலையை பாதுகாத்து போரில் தன் இன்னுயிரை நீத்து அண்டை நாடுகளின் படையெடுப்பை முறியடிக்கும் முயற்சியில் உயிர் தியாகம் உடலுறுப்பு இழந்தும் உன்னத பணியாற்றிய முன்னாள் முப்படை தியாகிகளுக்கும் தற்போதைய வீரர்களுக்கும் கொடி தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என தேனி முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

தேனி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

image

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த அணியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 3, 2026

தேனி: பெண் தீக்குளித்து தற்கொலை

image

தேனி மாவட்டம், ராஜதானி பகுதியை சேர்ந்தவர் மீனா (46). இவர் கடந்த மூன்று வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக மருத்துவமனையில் கவுன்சிலிங் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனா தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 3, 2026

தேனி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை.!

image

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த முத்துலட்சுமி சில தினங்களுக்கு முன்பு விஷமருந்தி உள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!