News November 5, 2025

கையெடுத்து கும்பிட்டு, Fine போட்ட போலீஸ்!

image

உ.பி.யில் பின்னால் 4 பேர், முன்னால் 2 பேர் என 6 பசங்களுடன் பைக்கில் வந்தவரை பார்த்து போலீசும் ஒரு கணம் அரண்டு போயினர். அவரை மடக்கிய போலீசார், அபராதம் போடுவதற்கு முன், கையெடுத்து கும்பிட்டனர். பல்வேறு விதிமீறலுக்காக அவருக்கு ₹7,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக, நெட்டிசன்களும் அவர் செயலால் வாயடைந்து போயுள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News November 5, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாளாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ₹560 குறைந்து, ₹89,440-ஆகவும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹11,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹800, இன்று ₹560 என 2 நாளில் ₹1360 குறைந்துள்ளது.

News November 5, 2025

பாஜக இயக்குகிறதா? செங்கோட்டையன் பதில்

image

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தன்னை பாஜக உள்பட யாராலும் இயக்கமுடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். EPS-ன் மகன், மைத்துனர் போன்றவர்கள் அதிமுகவை இயக்குகிறார்கள் என்ற அவர், கட்சியை EPS-ன் உறவினர்கள் எங்கிருந்து, எப்படி இயக்குகிறார்கள் என அனைத்தும் தெரியும் என கூறியுள்ளார். மேலும், EPS-ன் குடும்ப அரசியலால் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பேசியுள்ளார்.

News November 5, 2025

உங்க பேங்க் பேலன்ஸ் அறிய, மிஸ்டு கால் கொடுங்க!

image

உங்களின் பேங்க் பேலன்ஸை அறிய வங்கி (அ) ATM-க்கு செல்ல வேண்டியதில்லை. ரெஜிஸ்டர் செய்த போன் நம்பரில் இருந்து, வங்கிக்கு மிஸ்டு கால் கொடுத்தாலே போதும். வங்கிகளின் கட்டணமில்லா நம்பர்கள்: SBI- 09223766666, ICICI- 09594612612, HDFC- 18002703333, AXIS -18004195959, UNION- 09223008586, Canara- 09015734734, BOB- 8468001111, PNB- 18001802223, Indian Bank- 9677633000, BOI- 09266135135. SHARE IT.

error: Content is protected !!