News January 23, 2025
கைத்தறி நெசவாளர்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள்

நெசவுத் தொழிலுக்கான இயந்திர மானிய விலையில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04272414745 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
சேலம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செப்.10) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சேலம் உடையாப்பட்டி, காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ரயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்.11-ல் கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), எர்ணாகுளம்-டாடாநகர் தினசரி எக்ஸ்பிரஸ் (18190), ஆழப்புலா-தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது ஈரோடு-சேலம் ரயில் பாதையில் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
சேலம் வழியாக செல்லும் வாராந்திர ரயில் நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355), இராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஆகிய ரயில் சேவைகள் வரும் அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.