News June 11, 2024
கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மிமீ): பெணுகொண்டாபுரம் 16.2, போச்சம்பள்ளி 8.5, கேஆர்பி டேம் 6.6 என மொத்தம் 31.3 மிமீ மழை பதிவாகி உள்ளது. கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 111கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
News April 21, 2025
கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

ஓசூர் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் அடவிசாமிபுரம், நல்லூர் கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்த காமையூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த கணேசன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
News April 20, 2025
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாகலூரை அடுத்து மாலூர் செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் இன் உதவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 வயது சிறுவனுக்கு எந்த காயமும் இன்றி உயிர்பிழைத்தார்.