News March 31, 2024
கோயிலில் மலைபோல் குவிந்த விறகுகள்

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தினம் தோறும் விறகுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோவில் முன்பு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 60 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவர் .
Similar News
News October 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

ஈரோடு, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முந்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
ஈரோடு: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <