News February 25, 2026

கேரள மக்களை இனி அழைப்பது எப்படி? சசிதரூர்

image

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்றுள்ள சசிதரூர், ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் கேரள மக்களை Keralite, Keralan என அழைப்பது வழக்கம். பெயர் மாற்றத்திற்கு ஏற்ப, Keralamite என்றழைப்பது ஒரு நுண்ணுயிரி போலவும், Keralamian என்றழைப்பது அரியவகை கனிமம் போலவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சசிதரூர், இது தேர்தல் ஸ்டண்ட் என்றும் கிண்டலடித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

234-ல் எங்கு வேண்டுமானாலும் நிற்பேன்: கருணாஸ்

image

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக அமைந்ததாக கருணாஸ் கூறியுள்ளார். அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது என்றும், புதிய கட்சிகள் பல வந்துள்ளதால் எத்தனை தொகுதி என்பதை விட, ஸ்டாலினை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம் எனவும் தெரிவித்தார். ஸ்டாலின் சொன்னால் 234 தொகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் நிற்பேன் எனவும் கூறியுள்ளார்.

News February 28, 2026

காங்கிரஸுக்கு ரோஷம் இல்லை: குஷ்பு

image

தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸுக்கு தகுதியும் இல்லை, தைரியமும் இல்லை என குஷ்பு விமர்சித்துள்ளார். ஒரே சமயத்தில் திமுக மற்றும் விஜய்யிடம் காங்கிரஸ் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகவும், யாரிடம் இருந்து அதிக லாபம் கிடைக்கிறதோ அந்த பக்கம் சென்றுவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தரமுடியாது என CM ஸ்டாலின் சொன்ன பிறகும், காங்கிரஸுக்கு ரோஷம் வாரவில்லை எனவும் சாடியுள்ளார்.

News February 28, 2026

குழந்தைகளின் ரத்தத்தை குடிக்கும் அரக்கன் (போர்)

image

போரை தீர்மானிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க, அதன் கோர முகத்தை நேரடியாக சந்திப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். 2025-ல் மட்டும் உலகளவில் நடந்த போர்களில் சுமார் 2,40,000 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சோகம் இத்துடன் நின்றுவிடவில்லை. 2024-ல் மட்டும் சுமார் 47.3 கோடி குழந்தைகள் போரினால் வறுமை, உடல் & மனரீதியிலான பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இப்போ சொல்லுங்க.. போர் அவசியமா?

error: Content is protected !!