News March 22, 2024
கேரளா மீனவர்களை தாக்கவில்லை

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சிலர் ஒன்றிணைந்து விசைப்படகுகள் மூலம் கடந்த 20-ம் தேதி இரவு கடலுக்கு சென்று கேராளா, குளச்சல் படகு வருகின்றதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கேரளா விசைப்படகு மற்றும் 5-குளச்சல் விசைப்படகு என மொத்தம் 6-படகுகளை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News February 17, 2026
தூத்துக்குடி: கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த மீனவரான ஜான்சன், நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஜான்சன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 17, 2026
தூத்துக்குடிக்கு கனமழை எச்சரிக்கை – IMD

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் பிப்.21 ம் தேதி கனமழை பெய்ய கூடும். மறுநாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT..


