News July 26, 2024
கேரளா செல்வோர் கவனத்திற்கு..!

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தார். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கேரளம் ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுநர்களுக்கு பரிசோதனை நடைபெறுகிறது.
Similar News
News March 3, 2026
கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் திருத்தேர் விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை (மார்ச்.4) காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை, பேரூரில் இருந்து செட்டிவீதி ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே திரும்பி, பேரூர் பைப்பாஸ் ரோடு அடைந்து உக்கடம் வந்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
News March 3, 2026
திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.