News August 17, 2024
கேரளாவுக்கு 2 கோடி வழங்கிய மார்ட்டின் குழுமம்

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் மார்டின் குழுமம் செயல்பட்டு வருகின்றது. இதன் நிர்வாக இயக்குநர் சார்லஸ் மார்ட்டின், இன்று கேரள வயநாடு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாயும், வெள்ள நிவாரண மறுவாழ்வு இல்லம் கட்டுவதற்காக ரோட்டரி மூலம் ஒரு கோடி ரூபாய் என இரண்டு கோடியை இன்று திருவனந்தபுரம் முதல்வர் செயலகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் கே.ஏ.குரியாச்சனிடம் வழங்கினார்.
Similar News
News November 2, 2025
கோவை: What’s App இருக்கா உஷார்

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 1, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
கோவை: இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. பயிற்சி முடித்தால் வேலை வாய்ப்பு உறுதிசெயப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <


