News November 25, 2025

கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை

image

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அணை நீர்மட்டம் 138 அடியை நெருங்கியதால் கேரளாவுக்கு எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

image

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

13-18 வயதுள்ள குழந்தைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம்

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்கும் 13 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணையத்தள முகவரியில்
(https://awards.tn.gov.in) 29.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 27, 2025

தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!