News May 16, 2024

கேரளாவில் மழையா? அப்போ நெல்லையிலும் மழைதான்

image

கேரளாவில் வருகிற மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாக இன்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் மழை தொடங்கினால் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்வது வழக்கம். தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் நெல் கார் பருவ சாகுபடி பணியை மேற்கொள்வர்.

Similar News

News September 16, 2025

நெல்லை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️ காலியிடங்கள்: 368 ▶️ வயது வரம்பு: 20 – 33 ▶️ கல்வி தகுதி: Any Degree ▶️ பணிகள்: Station Controller ▶️ சம்பளம்: ரூ.35,400 ▶️ பணியிடம்: தமிழ்நாடு ▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025 ▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

கவின் ஆணவ கொலை வழக்கு…. முக்கிய விசாரணை

image

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட எஸ்ஐ சரவணன், அவரது மகன் சுர்ஜித், உறவினர் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்ற காவல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சரவணனின் ஜாமீன் மனு நெல்லை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமா, விசாரணையை இன்று (செப் 16) ஒத்திவைத்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின் ஜாமீன் முடிவு எடுக்கப்படும்.

News September 16, 2025

நெல்லை: கழுத்து அறுத்துக் கொல்லபட்ட ஆடு

image

பணகுடி அருகே தண்டையார் குலத்தை சேர்ந்தவர் உள்ள முடையார் (44). இவரது ஆடுகள் வேப்பிலங்குளத்தை சேர்ந்த சகாயம் என்பவரது தோட்டத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஒரு ஆடு கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது. இதற்கு சகாயம் தம்பதிகள் காரணமாக இருக்கலாம் என உள்ள முடையார் அளித்த புகாரின் படி பணகுடி போலீசார் சகாயம் தம்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!