News April 2, 2026

கேரளாவில் இலவச பஸ் வாக்குறுதி அளித்த UDF

image

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் *பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், *கல்லுாரி மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை, *தொழில் முனைவோருக்கு வட்டியில்லா கடன் *முதியோர் ஓய்வூதியம் ₹2,000-ல் இருந்து ₹3,000 ஆக உயர்வு, *ASHA பணியாளர்களுக்கு தின ஊதியம் ₹700 ஆக உயர்வு, *₹25 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2026

சந்தீப் மிட்டலை நீக்குக: டி.ஆர்.பாலு

image

சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை ECI நியமித்தது. இந்நிலையில், RSS ஆதரவாளரான சந்தீப் மிட்டல், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் & நடவடிக்கைகளுக்கு ஆளானவர்; அவரை டிஜிபியாக நியமிக்க என்ன காரணம் என்று T.R.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் கால செயல்பாடுகளுக்கும் ஊழல் தடுப்புத்துறைக்கும் தொடர்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பிய TRB, சந்தீப் மிட்டலை உடனே நீக்கவும் வலியுறுத்தினார்.

News April 11, 2026

தமிழக தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தேதி மாற்றம்

image

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்.17, 18-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 18 மற்றும் 20-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக சென்னை காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், இதுவரை 18,000 காவலர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 11, 2026

தோனி, ருதுராஜின் ஆர்டரை மாற்றுகிறதா CSK?

image

தோனி அணியில் இணைந்தாலும், இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்குவார் என கூறப்படுகிறது. ஏனெனில், பிளேயிங் 11-ல் மாற்றங்கள் வேண்டாம் என CSK உறுதியாக உள்ளதாம். அதேபோல், ருதுராஜை 3-ம் இடத்தில் இறக்கி, சஞ்சு – ஆயுஷை ஓபனிங் ஆடவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ருதுராஜின் மோசமான ஆட்டமே காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய DC-க்கு எதிரான போட்டியில் இவர்களின் செயல்பாட்டை பொறுத்து முடிவு எட்டப்படுமாம்.

error: Content is protected !!