News May 5, 2024
கேரம் விளையாட்டுக்கு அழைப்பு

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே.7) முதல் மே 22 வரை நடைபெறுகிறது.
இதில் 21 வயதிற்குட்பட்டோர் ‘ஸ்டைகர் ‘ உடன் வந்து பங்கேற்கலாம். பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.
Similar News
News December 15, 2025
பழனி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனி அருகே பாப்பம்பட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த முருகவேல் மகன் மருதராஜ் (26) என்றவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 15, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதியில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.