News December 23, 2025
கேமிங் உலகின் லெஜெண்ட் காலமானார்!

உலகப்புகழ் பெற்ற ‘Call of Duty’ கேமை உருவாக்கியவர்களில் ஒருவரான வின்ஸ் ஜாம்பெல்லா(55) கார் விபத்தில் மரணமடைந்துள்ளார். USA-ன் கலிபோர்னியாவின் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த மற்றொருவரும் மரணமடைந்துள்ளார். இவரின் Respawn Entertainment நிறுவனம் Apex Legends, Star Wars Jedi: Fallen Order போன்ற பேமஸ் கேம்களை உருவாக்கியுள்ளது. #RIP
Similar News
News December 27, 2025
தவெகவில் நடிகர் கவுண்டமணி இணைந்து விட்டாரா? CLARITY

நடிகர் கவுண்டமணி தவெகவில் இணைந்துவிட்டதாக SM-ல் செய்தி பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்பது போன்ற போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போட்டோவை எடிட் செய்து, சிலர் இப்படி தவறான தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. விஜய் தற்போது மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
கவிதைகளால் வரைந்த ஓவியமே ஸ்ரீதிவ்யா

இன்ஸ்டாவில் ஆக்டிவா உள்ள ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருக்கிறார். அதே பேசும் பார்வை, அதே மழலை சிரிப்பு, அதே கொஞ்சும் அழகு என கவிதைகளால் எழுதப்பட்ட ஓவியமாய் கண் முன்னே நிற்கிறார். இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 27, 2025
தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பொங்கல் தொகுப்பு தயாராக இருப்பதாகவும், ஜன.10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகையாக ₹5,000 வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத காந்தி, அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.


