News December 24, 2025
கேமரா போனை பயன்படுத்த பெண்களுக்கு தடை

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பெண்கள் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கீபேட் மொபைலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவதால் இந்த முடிவு என கிராமத்தினர் கூறுகின்றனர். இந்த நடைமுறை ஜன.26 முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 24, 2025
தினமும் காலையில் இந்த மேஜிக் Health Drink குடிங்க!

முருங்கைக்கீரை பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு ‘சூப்பர் ஃபுட்’. தினமும் காலையில் இதை கொதிக்க வைத்து, அந்த நீரை பருகினால் உடலில் பல மேஜிக் நடக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, *நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் *குளுக்கோஸ் அளவை சீராக்கும் *நல்ல கொழுப்பை அதிகரிக்கும் *மெட்டபாலிசத்தை சீராக்குகிறது *எடையை குறைக்க உதவும் *மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது *முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
News December 24, 2025
சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்

அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், ISRO-வின் பாகுபலி ராக்கெட்டான LVM3-M6 மூலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து காலை 8.54 மணிக்கு ஏவப்படுகிறது. சுமார் 6,100 கிலோ எடை கொண்ட இது, இந்திய மண்ணிலிருந்து ஏவப்படும் மிக அதிக எடை கொண்ட வணிக ரீதியிலான செயற்கைக்கோள் என்ற சாதனையை படைக்கவுள்ளது. செல்போன் டவர்களே இல்லாத இடங்களிலும் இனி தடையற்ற Internet சேவையை பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.
News December 24, 2025
2025 REWIND: இந்தியாவின் டாப் 5 பவுலர்கள் இவுங்கதான்!

2025-ல் T20I கிரிக்கெட்டில் இந்திய அணி, அசைக்க முடியாத சக்தியாக மாறியதற்கு அணியின் பவுலர்களுக்கும் முக்கிய பங்குண்டு. 2025-ல் இந்தியாவுக்காக T20I-ல் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். இந்த லிஸ்ட்டில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி பும்ராவையே முந்திவிட்டார். யார் முதல் இடத்தில் இருக்கிறார் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்யவும்.


