News December 21, 2025

கேப்டன் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் மகன்

image

கோவையில் ரசிகர்களுடன் தான் நடித்த ‘கொம்பு சீவி’ படத்தை சண்முகபாண்டியன் பார்த்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தந்தையான கேப்டன் விஜயகாந்தின் பயோபிக் படத்தில் நடிக்க அதிக ஆசை உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வளவு எளிதாக அவருடைய வாழ்க்கையை படமாக்கி விட முடியாது என்ற அவர், சரியான இயக்குநர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார். இவர் கேப்டன் ரோலுக்கு பொருத்தமாவாரா?

Similar News

News December 26, 2025

விஜய்யுடன் கூட்டணி சேர காங்., செயல் தலைவர் விருப்பம்

image

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் என வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் TN-ல் காங்கிரஸ் வளர விரும்பினால், தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிழலில் இருந்தால் காங்., வளர்ச்சி குன்றிவிடும் எனவும் கூறியுள்ளார்.

News December 26, 2025

இந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகைகள் PHOTOS

image

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் 2 இனிப்பு வகைகள் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளன. TasteAltas ‘உலகின் 100 சிறந்த இனிப்பு வகைகள் 2025-2026’ பட்டியலில் குல்பி 49-வது மற்றும் ஃபிரினி 60-வது இடத்தை பிடித்துள்ளன. குல்பி நமக்கு தெரியும். ஆனால், ஃபிரினி பலருக்கும் தெரியாது. இது, அரிசி பாயசம் போல், அரைத்த அரிசி, பால், பாதாம், ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

News December 26, 2025

BREAKING: ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹15 பைசா குறைந்து, ₹89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

error: Content is protected !!