News March 24, 2026
கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள்: TTV

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய TTV தினகரன், நாங்கள் கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள் என்றும், 11 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார். அதிமுக அலுவலகத்திற்கு 1987 முதல் வருகிறேன். கடந்த 7,8 ஆண்டுகளாக தான் வரவில்லை; இங்கு ஜெயலலிதா இருப்பதை உணர்கிறேன். தேர்தலில் NDA அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
Similar News
News April 1, 2026
பிரசாரத்துக்கு நடுவே திமுக ஆலோசனை கூட்டம்

ஒருபுறம் பிரசாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், மறுபுறம் திமுக நிர்வாகிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்தவகையில், நாளை மறுநாள் (ஏப்.3) ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து வேட்பாளர்கள், மா.செ.,க்கள் மட்டுமின்றி, ஒன்றிய, நகர செயலாளர்களும் கலந்துகொள்கின்றனர். பிரசாரத்தை வேகப்படுத்துவது தொடர்பாக ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.
News April 1, 2026
ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமானது என தெரியுமா?

பண்டைய காலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. 1852-ம் ஆண்டில் கிரிகோரியன் காலண்டர் அறிமுகமான பிறகு, ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக மாறியது. பிரான்ஸில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பல ஐரோப்பிய நாடுகள் இதனை ஏற்கவில்லை. அவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடினர். உலகம் மாறியது தெரியாத முட்டாள்கள் என அவர்கள் கிண்டலடிக்கப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாக மாறிபோனது.
News April 1, 2026
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. ஏப்.20-ல் விண்ணப்பம்

2026 – 2027 கல்வியாண்டில், RTE-யின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்.20 – மே 18 வரை நடைபெறவுள்ளது. ஆண்டு வருமானம் ₹2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு, அருகிலுள்ள 5 பள்ளிகளில் rte.tnschools.gov.in என்ற வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் LKG (அ) 1-ம் வகுப்பில் சேருவோர் 8-ம் வகுப்பு வரை இலவசமாக தனியார் பள்ளிகளில் பயிலலாம். SHARE


