News August 5, 2024

கேக் வெட்டி கொண்டாட்டம்: 3 போலீசார் சஸ்பெண்ட்

image

மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதி, மருத்துவமனையில் தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 4, 2026

கடலூர்: 10 ஆண்டுக்கு பிறகு மோதும் வேட்பாளர்கள்

image

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் போட்டியிட உள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தற்போது அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எம்.சி.சம்பத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் தற்போது எம்.சி.சம்பத் – சந்திரசேகர் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் மோத உள்ளனர்.

News April 4, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

image

விருத்தாசலம் அடுத்த எடச்சித்தூரை சேர்ந்தவர் முருகவேல்(27). இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

கடலூர்: ரூ.88 லட்சம் விடுவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அன்று முதல் தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95,33,841-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.88,05,561 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!