News July 9, 2025

கேஆர்பி அனையின் நீர்மட்டம் விவரம்

image

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் மொத்த ஆழம் 52 அடியாக உள்ள நிலையில், இன்று (ஜூலை 9) அதன் நீர்மட்டம் 50.95 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர்வரத்து வந்துள்ள உள்ள நிலையில், 204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் சீராக இருப்பதால், இது விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் பேச்சு போட்டி

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும், 21ல், அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சு போட்டியும், 22ல், கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடக்கின்றன. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் 2/2

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்

News July 9, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு 1/2

image

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், தங்கும் வசதி, உணவு & ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு (044-22500107, 04343239400). <<17003791>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!