News November 7, 2025
கெளரி கிஷனுக்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பூ

கெளரி கிஷனிடம் எடை குறித்து கேட்ட செய்தியாளரை குஷ்பூ விமர்சித்துள்ளார். பெண்ணின் உடல் எடை என்பது இவர்களுக்கு தேவையற்ற விஷயம் எனவும், மீடியா தரக்குறைவாகி வருவதாகவும் விமர்சித்தார். இக்கேள்வியை அவர் வீட்டு பெண்களிடம் கேட்டால் அமைதியாக இருப்பாரா என்று வினவிய குஷ்பூ, அவருக்கு பதிலடி கொடுத்த கெளரியையும் பாராட்டினார். மேலும், மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
Similar News
News February 12, 2026
வாக்காளர்களே ரெடியா.. ECI அறிவித்தது

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, EVM & VVPAT இயந்திரம் பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ECI அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டர், சப்-கலெக்டர் & வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் செயல்முறை விளக்க மையங்கள் மற்றும் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
News February 12, 2026
யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும்: GK மணி

<<19100878>>முக்கியமான துரோகி<<>> என அன்புமணி வைத்த விமர்சனத்துக்கு GK மணி பதிலடி கொடுத்துள்ளார். ராமதாஸுடன் இருப்பதால் துரோகிகள் என்று அநாகரிகமாக, அவதூறாக பேசுவது நல்லதல்ல என எச்சரித்துள்ளார். தான் யாருக்கும் மனதார கெடுதல் நினைப்பவன் அல்ல என கூறிய அவர், துரோகியாக இருந்திருந்தால் ராமதாஸுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
News February 12, 2026
2026-ன் ரியல் ஹீரோ EPS தான்: செல்லூர் ராஜு

கட்சியைப் பிரிப்பதே திமுகவின் வேலை, அதற்கு பயந்தே திருமாவளவன் அமைதியாக இருக்கிறார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். TN-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போர்க்குரல் எழுப்ப வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை என்ற அவர், அதை விடுத்து சீட் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் அமைதி காப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 2026-ன் Real Hero EPS தான் எனவும் அவரே CM ஆகப்போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.


