News October 27, 2024
கெலவரபள்ளி அணையில் குறைந்த ரசாயன நுரை
ரசாயன நுரையால் மூடப்பட்டிருந்த ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் நுரை குறைந்து போக்குவரத்து சீரானது. அணையில் இருந்து 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதிகப்படியான ரசாயன நுரை 30 அடி உயரத்துக்கு சாலையை ஆக்கிரமித்தது. இதனால் நந்திமங்கலம், சேவி செட்டிப்பள்ளி, கொவலதாசபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 19, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு
போச்சம்பள்ளி வட்டத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்களிடம் நேரடியாக சென்று கள ஆய்வு நடைபெற உள்ளது. இந்த கள ஆய்வு நாளை காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 19, 2024
கிருஷ்ணகிரியில் 22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 18, 2024
கிருஷ்ணகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியிலிருந்து பேரிகை செல்லும் சாலையில் புலியரசி கிராமத்தை அடுத்துள்ள செட்டிப்பள்ளி காப்புகாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் ஆங்காங்கே கேமராவை பொருத்தி வருகின்றனர். இதன்மூலம் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்டறியப்பட்டு அவற்றை பிடிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.