News September 4, 2025
‘கூலி’ OTT ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினி நடித்த ‘கூலி’ படம் வரும் செப்.11ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் காணலாம். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் இப்படத்தில், சில BTS காட்சிகளும் இணைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தியேட்டரில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் படம் பார்த்துட்டீங்களா?
Similar News
News March 27, 2026
சிட்டிங் MLA-க்கள் 13 பேரை ஓரம் கட்டிய இபிஎஸ்

2021-ல் வென்ற 13 MLA-களுக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவிநாசி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், EX சபாநாயகர் தனபாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி -கோவிந்தசாமி, ஆரணி-ராமச்சந்திரன், வானூர்-சக்கரபாணி, சங்ககிரி – சுந்தர்ராஜன், திருப்பூர் வடக்கு-விஜயகுமார், மடத்துக்குளம்-மகேந்திரன் உள்ளிட்ட 13 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
IPL திருவிழாவுக்கு தயாரா..!

நாளை தொடங்கும் IPL திருவிழாவில் நடப்பு சாம்பியனான RCB-ஐ, சின்னசாமி மைதானத்தில் SRH எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு <<19485880>>கொண்டாட்டத்துடன் <<>>IPL தொடங்காது என்றாலும், பல சுவாரஸ்யங்கள் இந்த சீசனில் உள்ளன. முக்கியமாக IPL வரலாற்றிலேயே முதல்முறையாக, இந்த சீசனில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் இந்தியர்களே கேப்டன்களாக உள்ளனர். இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் CSK ரசிகர்களுக்கு இது ஸ்பெஷல் தொடராகும்.
News March 27, 2026
கேஸ் சிலிண்டர்கள்.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் 20% கூடுதலாக வணிக கேஸ் சிலிண்டரை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் போருக்கு முந்தைய அளவில் இருந்து தற்போது 70% அளவு வணிக சிலிண்டர் விநியோகிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


