News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்

பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
வேலூர்: கல்வியில் சிறந்து விளங்க

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில். சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள பெருமாளுக்கு நெய்விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். இந்த செய்தியை குழந்தை வைத்திருப்பவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<