News July 8, 2025
கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!
Similar News
News July 8, 2025
சொர்ண லட்சுமி நரசிம்மர் கோயில்!

ஈரோடு, கோனார்பாளையத்தில் புகழ்பெற்ற சொர்ண லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
ஈரோடு: விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை

ஈரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கான வயது வரம்பு 2025ம் ஆண்டு 30-4-2025 படி 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி வரை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ஈரோடு மாவட்ட இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
News July 8, 2025
ஈரோடு மாதம் ரூ.1,200 பென்ஷனுக்கு விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. <