News September 27, 2024

கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

image

திருக்கண்ணபுரம் அங்காளம்மன் கோவிலை சேர்ந்தவர் நடராஜன் (57). கூலித் தொழிலாளியான இவர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்துக் கொண்டார். நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Similar News

News August 16, 2025

வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 16, 2025

நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <>clip.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 16, 2025

50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!