News April 8, 2024

கூத்தாநல்லூர் நகராட்சி வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை சரக DIG ஆய்வு

image

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் (DIG) T.ஜியாவுல் ஹக் நேற்று (20.11.2024) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உடனிருந்தார். இந்த நிகழ்வில், காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் உடன் இருந்தனர்.

News November 21, 2025

திருவாரூர்: நலிவுற்ற கலைஞர்களுக்கான சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இசை, நாடகம், கிராமிய கலைகள், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியவர்களில் 58 வயது நலிந்த நிலையில் வாழும் நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் வருகிற 22-ம் தேதி அனைத்து வட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நலிவுற்ற கலைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News November 21, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.20) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!