News May 10, 2024
கூத்தாநல்லூர் அரசு பள்ளி மாணவிகள் நூறு சதம் வெற்றி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் தேர்வு எழுதிய மாணவிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மாணவியாக மு.பஹிமா 500க்கு 480 மதிப்பெண்ணும், இரண்டாம் இடத்தில் நூர் அஃபிலா 500க்கு 476ம் மூன்றாவதாக த.மு.ராயிகா 500க்கு 475 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News July 8, 2025
திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News July 7, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 54 நகர்ப்புற முகாம்கள் 131 ஊரக முகாம்கள் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 15 திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி வட்டத்திலும்; ஜூலை 17ஆம் தேதி நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், பேரளம் பகுதியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.