News April 25, 2024
கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மேலும், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Similar News
News January 10, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கள்ளக்குறிச்சியில் மழையால் மின்தடையா? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!
News January 10, 2026
கள்ளக்குறிச்சியில் சோகம் – எதிர்பாராத மரணம்!

கள்ளக்குறிச்சி: கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.சடையன் (70). விவசாயியான இவா் 10 ஆடுகள் வளா்த்து வருகிறாா். சடையன் அதே கிராமத்தில் உள்ள மண்ணோடை அருகே இச்சிலி மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சடையன் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


