News February 19, 2025
கூட்டுறவு கல்லூரியில் புதிய கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்

புதுச்சேரி பிராந்தியம் மாஹேவில் உள்ள கூட்டுறவு கல்லூரியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டபேரவை தலைவர் செல்வம் , துணை சபாநாயகர் ராஜவேலு , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 21, 2025
புதுவை: காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு அழைப்பு

புதுவை சுகாதாரத்துறையில் சமீபத்தில் நர்சிங் அதிகாரி (நர்சுகள்) பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்த தேர்வில் வெற்றிபெற்ற சிலர் பணியில் சேரவில்லை. இதைத்தொடர்ந்து அந்த காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
News February 20, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங் வர்த்தக தளத்தின் மூலம் முதலீடு உட்பட பல்வேறு வழிகளில் வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய தூண்டுகின்றனர். எந்தவொரு தளத்திலும் முதலீடு செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த முன்னறிவும் இல்லாமல் எந்த ஆன்லைன் பங்கு வர்த்தக தளத்திலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்றார்.
News February 20, 2025
புதுவை: மீன்பிடி வலைக்கு தீ வைப்பு

பிள்ளைச்சாவடி கடற்கரையில் வைத்திருந்த மீன்பிடி வலை, மர்ம நபர்களால் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் சித்திரவேல், ராகவன், கோகுல், கார்த்தி ஆகியோர்களின் நான்கு வலைகளுக்கு நேற்று மதியம் மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 4 வலைகளும் முழுதுமாக எரிந்துள்ளன. குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.