News January 24, 2026

கூட்டணி முடிவு: சஸ்பென்ஸ் வைத்த கிருஷ்ணசாமி

image

பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில், புதிய தமிழகம் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் புதிய தமிழகம் இல்லாமல் தென் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது எனத் தெரிவித்தார். மேலும், கொள்கை ரீதியாக இம்முறை தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். அடுத்த, ஒருவாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் கூறினார்.

Similar News

News January 31, 2026

BREAKING: மாதம் ₹5,000.. CM ஸ்டாலின் அறிவித்தார்

image

கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான தொகுப்பூதியத்தை ₹5,000 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே மாதாந்திர தொகுப்பூதியம் ₹4,000-ஆக இருந்த நிலையில், மேலும் ₹1,000 உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் ₹40,419 ஊழியர்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. SHARE IT.

News January 31, 2026

என்னென்ன கோல்டு லோன் இருக்கு தெரியுமா?

image

தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்ற பணத்தை, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன. குறைந்த வட்டியில், அவசர நிதி தேவைகளை நிறைவேற்ற கோல்டு லோன் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. என்னென்ன வகையான கோல்டு லோன்கள் உள்ளன என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவசர காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என்பதால் பலரும் தங்கம் மீது ஆர்வம் காட்டுகின்றனர்.

News January 31, 2026

தாமதமாகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. SORRY கேட்ட விஜய்

image

‘ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து முதல்முறையாக விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், இதற்காக உண்மையாகவே வருத்தம் (SORRY) தெரிவித்து கொள்வதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜன நாயகன் தனது கடைசி படம் என்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.

error: Content is protected !!