News February 7, 2026
கூட்டணி பற்றிய செய்திகளில் உண்மையில்லை: தவெக

தவெக காங்கிரஸுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தொடர்ந்து செய்தி வருகிறது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் தவெகவை பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக் கொள்வதற்காக பல கட்சிகள் உண்மையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News February 19, 2026
குழந்தைகளுக்கு எருமைப்பால் கொடுப்பது கெட்டதா?

குழந்தையில் குரல் வளம் மேம்படும் என்ற நம்பிக்கையில் சிலர் எருமைப்பால் கொடுப்பர். ஆனால், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே எருமைப்பால் கொடுப்பது பாதுகாப்பானது. இதில் கொழுப்பு & புரதம் அதிகமாக இருப்பதால், தண்ணீர் கலந்து (அ) அளவாக கொடுப்பதே சிறந்தது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எருமைப்பால், பசும்பால் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News February 19, 2026
5 பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த நடிகவேள் MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட அவருக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.
News February 19, 2026
₹13,000 கோடியை முழுங்கிய பிரியாணி உணவகங்கள்

1.77 லட்சம் பிரியாணி உணவகங்கள் தங்களது ₹70,000 கோடி வருமானத்தில் ₹13,000 கோடி மதிப்புள்ள பில்லிங் பதிவுகள் நீக்கி வரி ஏய்ப்பு மோசடி செய்துள்ளன. இந்த ஸ்கேமை வருமான வரித்துறையினர் AI உதவியுடன் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இந்த மோசடி கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரியாணி உணவகங்களில் மட்டும் ₹1,200 கோடிக்கான பில்கள் நீக்கப்பட்டுள்ளது.


