News January 28, 2026

கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

image

பிப். 3-ம் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்(25), விசிக(6), CPI(6), CPM(6) உள்ளிட்ட கட்சிகள் இம்முறை அதிக சீட்டுகளை கேட்க திட்டமிட்டுள்ளதால், அது திமுகவுக்கு நெருக்கடியை அதிகரிக்கலாம். கமலின் மநீம கட்சியும் அதிக தொகுதிகளை கேட்பதால் இம்முறை DMK போட்டியிடும் இடங்கள் கடந்த முறையைவிட குறைய வாய்ப்புள்ளது.

Similar News

News February 1, 2026

BUDGET 2026: தமிழ்நாட்டில் அரியவகை தாது வழித்தடம்

image

அரியவகை தாது வழித்தட திட்டத்துக்கு ₹40,000 கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் இந்த அரியவகை தாது வழித்தடம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

News February 1, 2026

BREAKING: சென்னைக்கு அதிவேக ரயில் வழித்தடம்

image

சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு, டெல்லி – வாரனாசி உள்ளிட்ட 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நகரங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்படும் இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் எனவும், இதற்காக ₹5,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது நடைமுறைக்கு வந்தால் பயண நேரம் கணிசமாக குறையும்.

News February 1, 2026

பாஜக அரசில் பொருளாதார ஸ்திரத்தன்மை: FM நிர்மலா

image

12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் திகழ்வதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கலின்போது பேசிய அவர், நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி & மிதமான பணவீக்கம் ஆகியவையும் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களது அரசு எடுத்த முக்கிய தேர்வாக அமைந்துள்ளது என்றார்.

error: Content is protected !!