News January 21, 2026
கூட்டணியில் இணைந்ததும் TTV வைத்த டிமாண்ட்

NDA-ல் இணைந்திருக்கும் TTV தினகரன், 15 தொகுதிகள், 1 ராஜ்யசபா எம்பி சீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம்(தஞ்சை), சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர், முசிறி, நாங்குநேரி, ஆண்டிபட்டி, மேலூர், காரைக்குடி, ஒட்டப்பிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகள் மீது தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இவற்றில் 9 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News April 2, 2026
ஆண்களை திருமண வலையில் வீழ்த்திய பலே கில்லாடி

ராஜஸ்தானில் திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய ரேகா கவுர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. திருமணம் முடிந்தவுடன் மணமகனின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பிப்பதே அவரது வாடிக்கையாகும். இந்நிலையில் விக்ரம்ஜீத்தை மணந்த ரேகா கவுர், அவருடைய வீட்டில் இருந்து தப்பிக்க மாமியாருக்கு விஷம் வைத்துள்ளார். முதலில் ரேகா கவுர் காணாமல் போனதாக எண்ணிய விக்ரம்ஜீத், பின்னர் உண்மையை அறிந்து மனமுடைந்தார்.
News April 2, 2026
அதிமுகவுக்கு தாவிய தவெகவினர்

தவெகவின் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியை சேர்ந்த 25-க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளா் ADS சுரேஷ், துணை செயலாளர் சசிகலா, உள்ளிட்டோர் தவெகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மா.செ., சுகுமார் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில், தவெகவினர் அதிமுகவில் இணைந்ததால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
News April 2, 2026
தவெக, நாதகவை கண்டுகொள்ளாத ஸ்டாலின்

தேர்தல் பிரசாரங்களில் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தவெக & நாதக பற்றி பேசுவதை தவிர்க்கிறார். அக்கட்சிகளின் தலைவர்களான விஜய்யும், சீமானும் தன்னை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி ஸ்டாலின் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. போட்டியிலேயே இல்லாத அவர்களை பற்றிப் பேசி பெரிய ஆளாக்கிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதாகவும், இது சாதுர்யமான நகர்வு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


