News December 13, 2025

கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

image

2026 தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், விஜய்யை CM வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை தற்போதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சிகளை இழுக்க காய் நகர்த்தி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News December 19, 2025

தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

image

SIR-க்கு பிறகு தமிழகத்தில் 97.37 (9,37,832) லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக, 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்கு பிறகு 5.43 கோடி (5,43,76,755) வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, 2.66 கோடி (2,66,63,233) ஆண், 2.77 கோடி பெண் (2,77,60,332) & 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

News December 19, 2025

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி.. 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்

image

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 35 மாவட்டங்களில் சுமார் <<18614072>>94 லட்சம்<<>> வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியானால் 1 கோடியை எட்டுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது . சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் மாவட்டங்கள் மட்டுமின்றி, சிறிய மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

2026-ல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள்

image

2025-ல் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்து ஹிட் அடித்தன. அதேபோல், 2026-ல் வெளியாக உள்ள சில படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதன்படி, எந்தெந்த படங்களை, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க எந்த படத்துக்காக காத்திருங்கீங்க? கமெண்ட்ல பண்ணுங்க. SHARE

error: Content is protected !!