News June 10, 2024
கூடுவாஞ்சேரி பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டம்

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி நேற்று இரவு பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து 71 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் வகையில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாஜக நகர தலைவர் முரளிதரன் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் கலாராணி தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Similar News
News September 27, 2025
செங்கல்பட்டு: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 27, 2025
தாம்பரம்: கோவிலை கைப்பற்றிய அறநிலையத்துறை

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை கிராமத்தில், நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலை நிர்வகிப்பதில், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இக்கோவிலை கையகப்படுத்த, இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து
அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று இக்கோவிலை கையகப்படுத்தினர்.
News September 27, 2025
செங்கல்பட்டு: முக்கிய உத்தரவு, விவசாயிகளுக்கு நற்செய்தி

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.