News January 22, 2025

கூடுதல் வாடகை: புகார் தெரிவிக்கலாம்

image

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Similar News

News November 8, 2025

கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

image

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News November 8, 2025

தமிழக அரசால் நூலகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது

image

3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.

சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. டெண்டர் முடிவுற்ற பிறகு தமிழக அரசால் முழு விபரமும் தெரிவிக்கப்படும்

News November 8, 2025

கடலூர்: பால் கடை உரிமையாளர் பிணமாக மீட்பு

image

காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 64) இவர் கடைவீதியில் தனியார் பால் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். நவ.4ம் தேதி பால் கடையை திறக்க வந்த செந்தில் கடைக்கு வராமல் மாயமானார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், அங்கு இருந்த சாக்கடை கால்வாயில் பிணமாக நேற்று மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!