News October 23, 2024

கூடுதல் ரயில்கள் நிற்க வேண்டி விழுப்புரம் எம்பியிடம் மனு

image

திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் சார்பில், ரயில் பயணிகளின் நலனுக்காக, கூடுதலாக ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக ரயில்வே துறைக்கு, எம்.பி ரவிக்குமார் பரிந்துரைத்து கடிதம் அனுப்பி வைத்தார்.

Similar News

News January 23, 2026

விழுப்புரத்தில் EB பில் எகுறுதா..?

image

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

விழுப்புரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா!

image

விழுப்புரத்தில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எலிசா பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியாக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்கவும், நடமாடும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News January 23, 2026

வளவனூர் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது!

image

விழுப்புரம்: வளவனூர், சிறுவந்தாடு பகுதியில் வளவனூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த விக்ரமன், அரவிந்தன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இருவரையும் வளவனூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டல்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!