News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.
Similar News
News December 28, 2025
நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நீலகிரி மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நீலகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டத்தை தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


