News January 19, 2026

கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.

Similar News

News February 7, 2026

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கருப்பு கேரட்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம் தோட்ட கலைத்துறை சார்பில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு நிற கேரட் விதைகள் விதைக்கப்பட்டு தற்போது முதன்முறையாக அறுவடைக்கு தயாராகியுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில் சோதனை முயற்சியாக விதைக்கப்பட்டு வருகிறது, மார்ச் 15க்கு பிறகு அறுவடைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

News February 7, 2026

நீலகிரியில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News February 7, 2026

நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீலகிரி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!