News March 26, 2026

கூடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

image

சட்டமன்ற தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கூடலூர் சட்டமன்ற தொகுதி மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக இருப்பதால், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கூடலூரில் குஜராத்தை சேர்ந்த தருபால் மன்சூல்பாய் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு திருப்பி வழங்கப்பட்டது.

Similar News

News April 3, 2026

நீலகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: உதகை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதியில் ராமச்சந்திரன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

நீலகிரி: பேருந்தில் செல்பவர்கள் கவனத்திற்கு!

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!