News February 27, 2026
கூச்சமே இல்லையா OPS? அதிமுக

டீக்கடை நடத்தி வந்த OPS-ஐ CM-ஆக ஆக்கியது இந்த இயக்கம் தான் என அதிமுக பதிவிட்டுள்ளது. OPS உள்ளே இருந்தும், உபியாகவே இருந்தார், MGR மாளிகையில் கருணாநிதி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் என விமர்சித்துள்ள அக்கட்சி, அவர் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டதால் ஓனர்(திமுக) வாசப்படிக்கே போய்விட்டார் என சாடியுள்ளது. மேலும், இந்த கருமத்துக்கு தர்மயுத்தம் வேறயா என காட்டமாக பதிவிட்டுள்ளது.
Similar News
News February 27, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTO

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் நடிகை த்ரிஷா, இன்று 2 ஸ்டோரிகளை அப்டேட் செய்துள்ளார். அதில், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். பிங்க் நிற உடையில் த்ரிஷா ஜொலிக்கும் அந்த போட்டோவிற்கு ❤️❤️❤️ விடும் ரசிகர்கள், க்யூட்டாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்கின்றனர். அத்துடன், அடுத்த பட அப்டேட் குறித்தும் அவரிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
News February 27, 2026
ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பெற்றெடுத்த பெண்!

ஒரு பிரசவத்தில் 2 குழந்தைகளை பெற்றாலே நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம். ஆனால், சீனாவில் டிலி(24) என்ற இளம்பெண் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளார். அதும் 20 டாக்டர்கள் உதவியால் சுகப்பிரசவமாம். இதில் 4 பெண், 1 ஆண் குழந்தைகள். 1 குழந்தையை பார்த்துக் கொள்வதே பெரும்பாடு. 5 பேரை வைத்துக் கொண்டு டிலி என்ன பண்ண போறாங்களோ!
News February 27, 2026
BIG NEWS: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. திடீர் திருப்பம்

OPS ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். OPS திமுகவில் இணைந்த நிலையில், இவரும் அங்கு சேர உள்ளதாக காலையில் இருந்து செய்திகள் வந்தன. ஆனால், ஜெ.,வால் வளர்க்கப்பட்ட தனக்கு திமுகவுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை என கூறி EPS முன்னிலை அதிமுகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று EPS கட்சியில் இணைத்துக்கொண்டார்.


