News August 9, 2025
கூகுள் மேப் மூலம் வந்தவருக்கு நேர்ந்த கதி

ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன. இந்நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுந்தது.
Similar News
News August 9, 2025
கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.
News August 9, 2025
கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசு வேலை… கடைசி வாய்ப்பு

இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆக.10)க்குள் <
News August 9, 2025
பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு: சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்